கொரோனா எதிரொலி : இந்தியாவுடனான விமான சேவையை ரத்து செய்தது சவுதி அரேபியா..!

23 September 2020, 5:20 pm
Air_India_Updatenews360
Quick Share

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவுக்கான விமான சேவையை தற்காலிகமாக சவுதி அரேபியா நிறுத்தி வைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையில் 56 லட்சத்து 46 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், நாள்தோறும் சராசரியாக சுமார் ஒரு லட்சம் பாதிப்பு என்ற நிலையை இந்தியா சந்தித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் இந்தியாவுக்குச் செல்லும் மற்றும் வரும் அனைத்து விமானங்களையும் சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நாட்டின் விமானப் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா, பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளுக்கான விமான பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பயணம் செய்யும் பயணிகள், பயணம் செய்வதற்கு 96 மணி நேரத்திற்கு முன்னதாக, ஆர்டி-பிசிஆர் சோதனையின் அறிக்கையின் நகலை கொண்டு சமர்பிக்க வேண்டும், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த 20ம் தேதி முதல் அக்.,3ம் தேதி வரையில் ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 13

0

0