கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 8- லட்சத்து 50- ஆயிரத்தை தாண்டியது..!!!
31 August 2020, 8:45 amகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது. அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாளுக்கு நாள் உயிர்ப்பலிகளை அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகளையே நடுங்க வைத்துள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஆட்டம் காட்டி வரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் அனைவரிடத்திலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டும், பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியும் உள்ளன, மேலும் விமானம், பேருந்து, ரயில், கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கின.
இந்த கொரோனாவிற்கு தற்போதைய நிலவரப்படி உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 8,50,149 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25,377,704 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 17,700,828 பேர் உள்ளனர்.
இந்த வைரஸ் பரவத் தொடங்கியது முதல் விடியும் ஒவ்வொரு நாளிலும் பலி எண்ணிக்கை அதிகரித்தே வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது
0
0