14 நாடுகளுக்கு செல்ல ஐக்கிய அமீரகம் தடை நீட்டிப்பு

2 July 2021, 9:47 pm
Quick Share

இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு செல்ல ஜூலை 21 வரை ஐக்கிய அமீரகம் தடை விதித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அரசு தனது குடிமக்கள் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்குச் செல்வதற்கு ஜூலை 21 வரை தடை விதித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், லிபேரியா, நமீபியா, சியரா லியோன், காங்கோ ஜனநாயக குடியரசு, உகாண்டா, சாம்பியா, வியட்நாம், இந்தியா, வங்காள தேசம், நேபாளம், இலங்கை, நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா, 2021 ஜூலை 21 வரை தடை நீட்டிப்பு செய்துள்ளது.அதே நேரத்தில் சரக்கு விமானங்கள், அரசின் ஒப்புதல் பெற்று இயக்கப்படும் விமானங்கள் அந்நாடுகளுக்கு செல்ல விலக்களிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Views: - 148

0

0