இறைச்சிக்காக பசுக்களை வெட்டுவதற்கு தடை விதித்து புதிய சட்டம் : இலங்கை பிரதமர் ராஜபக்சே அறிவிப்பு

10 September 2020, 4:16 pm
Rajapaksa - updatenews360
Quick Share

இறைச்சிக்காக பசுக்களை வெட்டுவதை தடை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும் என்று இலங்கை பிரதமர் ராஜபக்சே அறிவித்துள்ளார்.

கடந்த 8ம் தேதி நடந்த இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தில் பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதை தடை செய்ய புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அந்நாட்டு பிரதமர் ராஜபக்சே அறிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பிற்கு ஆளும் கட்சியான இலங்கை மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் பெரும் வரவேற்பு அளித்தனர். இந்த தீர்மானத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்ற குழுவும் ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடர்ந்து, இந்த சட்டம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்சே பேசியதாவது :- இறைச்சிக்காக பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்று புத்த மத மறுமலர்ச்சி பிக்ஷுவும், தேசியத் தலைவருமான அனாகரிகா தர்மபாலா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இது சட்டமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், தற்போது எங்களின் அரசு இறைச்சிக்காக பசுக்கள் வெட்டுவதை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வர உள்ளது. இதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது. பசு இறைச்சி சாப்பிட விரும்புபவர்கள் வேண்டுமென்றால், வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம், எனக் கூறினார்.

Views: - 6

0

0