பாகிஸ்தானிற்கான சீனத் தூதரை குறிவைத்து பலூசிஸ்தானில் தாக்குதல்..! நான்கு பேர் பலி..!

22 April 2021, 5:53 pm
pakistan_blast_updatenews360
Quick Share

தென்மேற்கு பாகிஸ்தானில் சீன தூதருக்கு விருந்தளிக்கும் வகையில் ஒரு உயர் ஹோட்டலில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், அங்கு குண்டு வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர்.

பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டா நகரில், பாகிஸ்தான் முழுவதும் செயல்படும் ஒரு சொகுசு ஹோட்டல் சங்கிலியான செரீனாவின் கார் பார்க்கில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. பலூசிஸ்தானில் இராணுவம் ஒரு தசாப்த காலமாக பொதுமக்களின் கிளர்ச்சியை எதிர்த்துப் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

“இந்த குண்டு வெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர்” என்று பாகிஸ்தானின் உள்துறை மந்திரி ஷேக் ரஷீத் அகமது கூறினார். இது “பயங்கரவாத செயல்” என்று அவர் குறிப்பிட்டார்.

“சம்பவம் நடந்தபோது தூதர் தலைமையில் சுமார் நான்கு பேர் கொண்ட ஒரு சீனக் குழு ஹோட்டலில் தங்கியிருந்தது. குண்டு வெடிப்பு நடந்தபோது தூதர் ஒரு கூட்டத்திற்கு வெளியே வந்தார்.” என்று அவர் மேலும் கூறினார்.

பலூசிஸ்தான் இயற்கை வளங்களின் சொர்க்க பூமியாக இருந்தபோதிலும் அங்குள்ளவர்கள் ஏழைகளாக உள்ளனர். எரிவாயு மற்றும் கனிமச் செல்வத்தில் நியாயமான பங்கு தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறி, அங்குள்ளவர்கள் தனி நாடு கேட்டு போராடி வருகின்றனர்.

சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சியின் முக்கிய அங்கமான சீனா-பாகிஸ்தான் பொருளாதார காரிடார் (சிபிஇசி) வழியாக இப்பகுதியில் பில்லியன் கணக்கான டாலர் பணம் பாய்கின்றதால் அதிருப்தி இன்னும் அதிகரித்துள்ளது. பெரும்பாலான புதிய வேலைகள் வேலையாட்களுக்கு சென்றதால் தங்களுக்கு சிறிய நன்மை கூட கிடைக்கவில்லை என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நகரின் மூத்த காவல்துறை அதிகாரி அசார் இக்ரம், இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிசெய்து, சீனத் தூதர் ஹோட்டலில் தங்கியிருப்பதாகக் கூறினார். ஆனால் குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் அவர் அங்கு இல்லை.

“ஆரம்ப விசாரணையில் இது ஒரு வாகனத்தில் பொருத்தப்பட்ட ஒரு ஐ.இ.டி என்று தெரிகிறது.” என்று இக்ரம் கூறினார். எந்தவொரு குழுவும் உடனடியாக தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை.

2019’ஆம் ஆண்டில் துப்பாக்கி ஏந்தியவர்கள் சிபிஇசி திட்டத்தை எதிர்க்கும் வகையில் ஒரு சொகுசு ஹோட்டலைத் தாக்கினர். இதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். ஜூன் மாதத்தில், பலூச் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் பங்குச் சந்தையை குறிவைத்தனர். இது ஓரளவு சீன நிறுவனங்களுக்கு சொந்தமானது.

தாக்குதல்கள் அனைத்தும் பலூசிஸ்தான் விடுதலை இராணுவத்தால் உரிமை கோரப்பட்டன. 
இதற்கிடையே கிழக்கு நகரமான லாகூரை மையமாகக் கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சியின் தொண்டர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக பாகிஸ்தான் முழுவதும் வன்முறையில் ஈடுபடும் சூழலில் இந்த தாக்குதல் பாகிஸ்தான் அரசுக்கு மற்றொரு தலைவலியை கொடுத்துள்ளது.

Views: - 508

0

0