மாற்றுத் திறனாளி பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்..! வீடியோ எடுத்து பிளாக் மெயில் செய்யப்பட்ட கொடூரம்..!

Author: Sekar
26 March 2021, 12:48 pm
Rape_UpdateNews360
Quick Share

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தந்தையிடமிருந்து பணம் பறிப்பதற்காக, அவரின் 16 வயது காது கேளாத மற்றும் வாய் பேசமுடியாத மகளை கூட்டு பாலியல் செய்து வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த பாதுகாப்புப் பணியாளரின் மாற்றுத்திறனாளி மகளை பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோவை குற்றவாளிகள் சமூக ஊடகங்களில் வெளியிட்டதை அடுத்து விஷயம் வெளியே தெரிய வந்துள்ளது.

ஐந்து கயவர்களும், கடந்த மூன்று மாதங்களாக சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும், சிறுமியின் தந்தையை மிரட்டி பணம் பறிக்க வீடியோ எடுத்துள்ளனர்.

தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி சைகை மொழியில் தனது பெற்றோரிடம் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். குற்றவாளிகளில் சிலர் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விவகாரம் குறித்து, முதலில் பயம் காரணமாக அமைதியாக இருந்த அவரது தந்தை, சிறுமி பலாத்காரம் செய்யப்படுவது படமாக்கப்பட்டு பிளாக் மெயில் செய்யப்பட்ட பின்னர் காவல்துறையை அணுகி புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து காவல்துறை சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் சந்தேக நபர்கள் ஐவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை அதிகாரி சையத் கரார் உசேன் தெரிவித்தார்.

Views: - 107

0

0