துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு…!!

2 November 2020, 9:48 am
earth quake turky - updatenews360
Quick Share

துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.

துருக்கி நாட்டில் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரசின் பாதிப்புகளுக்கு 3.77 லட்சம் பேர் ஆளாகி உள்ளனர். இது தவிர்த்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், துருக்கி நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஈஜியன் கடல் பகுதியில் கடந்த வெள்ளி கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன. இந்த கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது என்றும் 961 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

துருக்கி மட்டுமல்லாமல் அருகில் உள்ள சமோஸ் உள்ளிட்ட கிரேக்க தீவு பகுதிகளிலும் நிலநடுக்கம் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்து உள்ளனர். இந்நிலநடுக்கம் 6.9 ஆக ரிக்டரில் பதிவானது என கிரேக்க நிலநடுக்கவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Views: - 32

0

0