அமெரிக்காவை அச்சுறுத்தும் டெல்டா வகை கொரோனா வைரஸ்: 28.7% பேருக்கு ஆல்பா வைரஸ் தொற்று!!

8 July 2021, 3:29 pm
Corona_Virus_UpdateNews360
Quick Share

வாஷிங்டன்: இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கோவிட் வைரசின் ஆதிக்கம் தற்போது தங்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது, அமெரிக்காவில் தற்போது கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவோரில் 51.7 சதவீதத்தினரிடம் டெல்டா வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக மிசூரி, கன்சாஸ், ஐயோவா போன்ற சில பகுதிகளில் புதிய கோவிட் நோயாளிகளில் 80 சதவீதம் பேருக்கு டெல்டா வகை தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல், மேற்குப் பகுதி மாகாணங்களில் புதிதாக கோவிட் உறுதி செய்யப்படுவோரில் 74.3 சதவீதத்தினருக்கு டெல்டா வகை தொற்று ஏற்பட்டுள்ளது. தெற்குப் பகுதி மாகாணங்களான டெக்ஸாஸ், லூசியானா, ஆர்கன்சாஸ், ஓக்லாமா ஆகியவற்றில் 58.8 சதவீத கோவிட் நோயாளிகள் டெல்டா வகை தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அந்த வகையில் அமெரிக்கா முழுவதும் தற்போது கோவிட் தொற்று பரவலில் டெல்டா வகை வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டெல்டா வகைக்கு அடுத்தபடியாக ஆல்பா வகை 28.7 சதவீத நோயாளிகளிடம் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கின்றன.

Views: - 216

0

0