கினியாவில் அதிபா் தலைமையிலான ஆட்சி கலைப்பு: அமலுக்கு வந்தது ராணுவ ஆட்சி…மக்கள் அமோக வரவேற்பு..!!

Author: Aarthi Sivakumar
6 September 2021, 10:33 am
Quick Share

கோனாக்ரி: கினியாவில் அதிபா் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டு ராணுவ ஆட்சி அமலுக்கு வந்ததாக ராணுவ கா்னல் அறிவித்துள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு பிரான்ஸ் நாட்டிடமிருந்து 1958ம் ஆண்டு விடுதலை பெற்றது. அந்நாட்டில் கடந்த 2010ம் ஆண்டு ஜனநாயக முறைப்படி நடைபெற்ற முதல் தேர்தலில் ஆல்பா காண்டே வெற்றி பெற்று அதிபரானாா். தொடா்ந்து அதிபராக இருந்து வந்த அவா் 3வது முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அதிபராகத் தொடா்ந்தாா்.

Image

ஆனாலும், அவருக்கு எதிா்ப்பு வலுத்து வந்தது. கினியா நாட்டில் இருந்து அலுமினியத்தின் தாது பொருட்கள் ஏற்றுமதியால் கினியா மக்கள் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை தலைநகா் கோனாக்ரியில் உள்ள அதிபா் மாளிகை அருகே கடுமையான துப்பாக்கிச்சூடு சப்தம் பல மணி நேரம் தொடா்ந்து கேட்டது.

இதையடுத்து, அரசுத் தொலைக்காட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ராணுவ கா்னல் மமாடி டம்போயா, அதிபா் ஆல்பா காண்டே தலைமையிலான அரசு கலைக்கப்பட்டதாக அறிவித்தாா். அரசாங்கத்தை ஒரு தனி நபரிடம் ஒப்படைக்க இனியும் தாங்கள் விரும்பவில்லை. அரசாங்கத்தை இனி மக்களே வழிநடத்துவார்கள். நாட்டைக் காப்பற்ற வேண்டியது ஒவ்வொரு ராணுவ வீரனின் கடமை என அவர் குறிப்பிட்டார்.

Views: - 408

0

0