புதிய அதிபராக பதவியேற்கும் ஜோ பிடென்..! எல்லோரும் பிரே பண்ணுங்க..! டிரம்ப் வீடியோ வெளியீடு..!

20 January 2021, 11:02 am
Donald_Trump_UpdateNews360
Quick Share

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடென், இன்று பதவியேற்புக்காக வாஷிங்டன் சென்றுள்ள நிலையில், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், முதல் முறையாக பிடெனின் புதிய நிர்வாகம் சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தனது சொந்த ஊரான டெலாவேரில் உள்ள வில்மிங்டனில் நடந்த ஒரு பிரியாவிடை விழாவில் பேசிய பிடென், அங்கு தனது மறைந்த மகனான பியூவுக்கு  அஞ்சலி செலுத்திய பிறகு, அங்கிருந்து வாஷிங்டன் கிளம்பினார். “எனக்கு ஒரே ஒரு வருத்தம் இருக்கிறது. என் மகன் இங்கே இல்லை என்று.” என்று பிடென் அப்போது கூறினார்.

இதற்கிடையே ஒரு வாரமாக பொதுவெளியில் வராத டிரம்ப், முன்பே பதிவு செய்யப்பட்ட பிரியாவிடை வீடியோவை வெளியிட்டு ஒருவார மௌனத்தை உடைத்துள்ளார்.

டிரம்ப் முதன்முறையாக அமெரிக்கர்களை, அடுத்து பதவியேற்கும் பிடென் நிர்வாகத்தின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இது நாள் வரை தேர்தல் மோசடி மூலம் பிடென் வெற்றி பெற்றார் என டிரம்ப் மற்றும் அவரது ஆதரவு குடியரசுக் கட்சியினர் தொடர்ச்சியாக புகார் கூறி வந்த நிலையில், தற்போது டிரம்பின் மனமாற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் பிடென் வெற்றி பெற்றதற்கு டிரம்ப் இன்னும் தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவிக்கவில்லை. மேலும் வழக்கமான ஓவல் அலுவலகத்தில் நடக்கும் தேநீர் விருந்துக்கும் அவரை அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 5

0

0