‘இ–வேஸ்ட்’களை சுவாகா செய்த இந்திய வம்சாவளி துபாய் மாணவி! எவ்வளவு டன் தெரியுமா?

17 January 2021, 8:43 am
Quick Share

துபாயில் வசித்து வரும் இந்திய வம்சாவளி மாணவியான ரிவா துல்புலே என்ற பத்தாம் வகுப்பு மாணவி, 25 டன் மின்னணு கழிவுகளை திரட்டி, மறுசுழற்சிக்காக அளித்துள்ளார். அந்த மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சர்வதேச அளவிலான முக்கிய பிரச்சினைகளில் ஒன்று மின்னணு கழிவு. ஆண்டுக்காண்டு சேர்ந்து கொண்டிருக்கும் மின்னணு கழிவுகளை அகற்றுவது மிகப் பெரிய சவாலான பணியாக உருவாகிக் கொண்டிருக்கிறது. அபாயகரமான இந்த கழிவுகளை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது.

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயைச் சேர்ந்தவர் ரிவா துல்புலே (வயது 15). துபாய் வாழ் இந்தியரான இவர், அங்கு பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு, புது வீட்டிற்கு குடி புகுந்த போது, பழைய வீட்டை ஒதுங்குபடுத்தினார். அப்போது வீட்டில், பயன்படுத்தப்படாத ‘இ-வேஸ்ட்’ எனப்படும் மின்னணு கழிவுகள் அதிகம் இருப்பதைக் கவனித்துள்ளார்.

நம்மிடமே இவ்வளவு இருக்கிறது, அப்போது துபாயில் எவ்வளவு ‘இ–வேஸ்ட்’ இருக்கும் என யோசிக்க, அவரது சிந்தனையில், ‘வீகேர் டிஎக்ஸ்பி’ என்ற மின்னணு கழிவுகளின் மறுசுழற்சி செய்யும் அமைப்பை துவங்கினார். கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அமைப்பில், பல தன்னார்வலர்களை உறுப்பினராக சேர்க்க துவங்கினார். அவர்களின் உதவியுடன், கடந்த 4 ஆண்டுகளில், உபயோகமற்ற லேப்டாப்கள், மொபைல்கள், பிரிண்டர்கள், கீ போர்டுகள் உள்ளிட்ட, 25 டன் (25 ஆயிரம் கிலோ) மின்னணு கழிவுகளை சேகரித்து அதனை மறுசுழற்சி செய்ய அளித்துள்ளார். இந்த மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Views: - 6

0

0