ட்ரோனை கவ்வி சென்ற கழுகு! வைரல் வீடியோ

5 February 2021, 8:35 am
Quick Share

பீச்சின் அழகை வானத்திலிருந்து படம் பிடித்து கொண்டிருந்த ட்ரோன் கேமரா ஒன்றை, கழுகு ஒன்று தூக்கி பறந்து சென்றது. கழுகு பார்வையில் இது வீடியோவாக வெளிவர, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ட்ரோனுடன் கழுகு ஒன்று பறந்து செல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. முதலில் பேஸ்புக்கில் பகிரப்பட்ட அந்த வீடியோ, பின் டுவிட்டருக்கும் பரவியது. இதனை புட்டெஜ்பிடென் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வீடியோவில், கடலுக்கு மேல் பகுதியில் பறக்கும் ட்ரோன் ஒன்று, தனது கேமரா மூலமாக பீச்சின் அழகை படம் பிடித்து கொண்டிருக்கிறது. அப்போது திடீரென அங்கு பறந்து வந்த கழுகு ஒன்று, அதனை தனக்கு கிடைத்த இரை என நினைத்து, தூக்கி பறந்து சென்றது. வேகமாக கழுகு பறந்த போதும், ட்ரோன் தொடர்ந்து காட்சிகளை பதிவு செய்கிறது. தரைப்பகுதியில் கழுகு பறக்கும் போது, கழுகின் நிழல் தரையில் விழுவது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. பின் கழுகின் இறகுகள் காமிராவில் தெளிவாக தெரிகிறது. 37 நொடிகள் ஓடும் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் லைக்ஸ்களை குவிக்க அது வைரலானது.

வீடியோ எங்கு படமாக்கப்பட்டது என தெரியவில்லை. இது மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. 2500க்கும் மேற்பட்டோர் லைக்ஸ் செய்துள்ளனர்.

ஒருவர் கழுகு சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறது என பதிவிட, மற்றொருவர், கழுகின் குஞ்சுகள் அம்மா கொண்டு வந்த உணவை கண்டு குழம்பப்போகின்றன என பதிவிட்டுள்ளார். மூன்றாவது பயனர், இது தான் உண்மையான கழுகுப் பார்வை என பதிவிட்டுள்ளார். நான்காவது நபர், இயற்கையை நீங்கள் குழப்ப முடியாது.. ஒவ்வொறு முறையும் இயற்கை தான் வெற்றி பெறும் என பதிவிட்டுள்ளார்.

Views: - 2

0

0