ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!

13 February 2020, 7:44 pm
Japan Earthquake updatenews360
Quick Share

ஜப்பானின் வடக்கு பகுதியில், கடலுக்கு அடியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி ஆபத்தோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

ஜப்பானின் வடக்கில் உள்ள எடோரூஃபூ தீவுக்கு கிழக்கே,  கடலுக்கு அடியில்,  60கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக, அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது, ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவானது. ஹொக்காடியோவில் உள்ள  கட்டிடங்கள் குலுங்கின. எனினும் கடலுக்கடியில் மிகவும் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஆபத்தோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்று  அந்த நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.