மாடர்னா நிறுவன தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி: இந்தோனேசியா அரசு ஒப்புதல்..!!

2 July 2021, 5:39 pm
moderna - updatenews360
Quick Share

ஜகார்த்தா: அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிக்கு இந்தோனேசிய அரசு அவசரகால ஒப்புதல் வழங்கியுள்ளது.

கோவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன. இந்தோனேசியாவில் கோவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும்பணி கடந்த மார்ச் மாதம் துவங்கியது.

moderna vaccine - updatenews360

இந்நிலையில் மாடர்னா தடுப்பூசிக்கு இந்தோனேசிய அரசு இன்று அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. இதன்மூலம் மாடர்னா தடுப்பூசி பிலிப்பின்ஸ் நாட்டு மக்களுக்கு செலுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

‘கோவாக்ஸ்’ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 40 லட்சம் மாடர்னா தடுப்பூசிகளை இந்தோனேசிய அரசு பெற உள்ளது. இந்தத் தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Views: - 202

0

0