அமெரிக்க அதிபருக்கு வந்த விஷம் தடவிய கடிதம்..! வெள்ளை மாளிகையில் பரபரப்பு..!

20 September 2020, 3:17 pm
White_House_UpdateNews360
Quick Share

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு வந்த விஷம் அடங்கிய ஒரு கடிதத்தை வெள்ளை மாளிகையில் உள்ள அதிகாரிகள் தடுத்து நிறுத்தியத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கடிதம் வெள்ளை மாளிகை மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட அஞ்சல்களை திரையிடும் அரசாங்க நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் இது ஆமணக்கு விதைகளில் இயற்கையாகவே காணப்படும் ரிசின் எனும் விஷம் இருப்பதைக் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து நடந்து வரும் விசாரணையை பகிரங்கமாக விவாதிக்க தனக்கு அதிகாரம் இல்லை எனக் கூறிய அந்த அதிகாரி மேற்கொண்டு எதையும் தெரிவிக்கவில்லை.

“விஷம் கொண்ட கடித உறை எங்கிருந்து வந்தது, யார் அஞ்சல் அனுப்பியது என்பதை எஃப்.பி.ஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகிறது.

முன்னதாக கடந்த 2018’இல் ஒரு கடற்படை வீரர் இதே போல், டிரம்ப் மற்றும் அவரது நிர்வாக உறுப்பினர்களுக்கு விஷம் தடவிய உறைகளை அனுப்பிய விவகாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் பிற அதிகாரிகளுக்கு 2014’ஆம் ஆண்டில் விஷம் தடவிய கடிதம் அனுப்பிய ஒரு மிசிசிப்பி மனிதருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 0 View

0

0