மியான்மர் ராணுவத்திற்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் தடை..! ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிராக பேஸ்புக் நடவடிக்கை..!

25 February 2021, 9:26 pm
myanmar_coup_updatenews360
Quick Share

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அகற்றி, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், மியான்மர் இராணுவ மற்றும் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள அரசு ஊடகங்கள் மற்றும் அதன் தளங்களை பயன்படுத்துவதை தடை செய்வதாக பேஸ்புக் இன்று அறிவித்தது.

“இன்று முதல், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருந்து மியான்மர் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள் மற்றும் ஊடக நிறுவனங்களையும், இராணுவத்துடன் இணைக்கப்பட்ட வணிக நிறுவனங்களின் விளம்பரங்களையும் தடை செய்கிறோம். பிப்ரவரி 1 ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள் முதல் நடந்த நிகழ்வுகள், கொடியவை உட்பட வன்முறை, இந்த தடைக்கான தேவையை துரிதப்படுத்தியுள்ளது.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரி 1’ஆம் தேதி, மியான்மரின் இராணுவம் அரசாங்கத்தை தூக்கியெறிந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் கூட்டப்படுவதற்கு தடை விதித்து ஒரு வருட கால அவசரகால நிலையை அறிவித்தது.

மியான்மர் அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி மற்றும் ஜனாதிபதி வின் மைன்ட், தேர்தல் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான பிற உயர் அதிகாரிகளுடன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சதி மியான்மர் முழுவதும் பொதுமக்களிடையே ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது.

மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து மூன்று பேர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை விடுவிக்கக் கோரி பல்லாயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் திரண்டு, இராணுவத்தின் எச்சரிக்கையையும் மீறி, தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

Views: - 2

0

0