2 வயது குழந்தையை ரூ.18 லட்சத்துக்கு விற்ற தந்தை : 2வது மனைவியுடன் இன்பச்சுற்றுலா சென்ற கொடுமை!!

4 May 2021, 12:36 pm
China Couple Sells Baby -Updatenews360
Quick Share

சீனா : 2 வயது மகனை ரூ.18 லட்சத்திற்கு விற்று தம்பதி இன்பச்சுற்றுலா சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் ஜி என்பவர் தனது இரண்டாவது மனைவிக்கு பராமரிப்பு சுமையை போக்குவதற்காக தனது 2வயது குழந்தையை விற்றுள்ளார். ஜி என்பவர் தனது சகோதரன் லின் என்பவருக்கு தனது குழந்தையை விற்றுள்ளார்.

இந்த நிலையில் குழந்தையை பாக்க விரும்பிய 2வது மனைவி, ஜியிடம் கூறியுள்ளார். ஜி தனது சகோதரனிடம் கூறி குழந்தையை அழைத்து தனது மனைவியிடம் காட்டியுள்ளார். ஆனால் அதன் பின் குழந்தை லின்னிடம் ஒப்படைக்கப்படவில்லை.

இதையடுத்து லின் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க, உடனே போலீசார் ஜி மீது வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் ஜி குழந்தையை 18 லட்ச ரூபாய்க்கு விற்று, 2வது மனைவியுடன் இன்பச்சுற்றுலா சென்றது தெரியிவந்துள்ளது.

இதையடுத்து தம்பதி மீது குற்றவியல் தொடர்பாக வழக்கு பதிந்த காவல்துறையினர், அவர்களை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். சமீப காலமாக சீனாவில் குழந்தை விற்கும் சம்பவம் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 182

0

0