முதல் முறையாக மெக்கா பாதுகாப்பு பணியில் பெண் ராணுவத்தினர்: சவுதி அரசு அதிரடி..!!

22 July 2021, 10:02 am
Quick Share

மெக்கா: சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் முதல் முறையாக பாதுகாப்புப் பணியில் ராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்கள் புனிதமாக கருதும் மெக்காவுக்கு ஆண்டுதோறும் உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் புனித யாத்திரை மேற்கொள்வர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும், வெளிநாட்டவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

நாட்டின் சமூக மற்றும் பொருளாதாரத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மேற்கொண்டு வருகிறார். முஸ்லிம் பழைமைவாத கொள்கைகளை மாற்றி வருகிறார். பெண்களுக்கு அதிக அதிகாரம், சுதந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.

ராணுவத்திலும் பெண்கள் அதிகளவில் சேர்ந்து வருகின்றனர்.இந்நிலையில், மெக்கா மற்றும் மதீனாவில், பாதுகாப்புப் பணியில், ராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த, ஏப்ரல் மாதம் முதல் இருந்து இவர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர்.

Views: - 87

0

0