நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரம்…!!

2 November 2020, 11:18 am
donald_trump_joe_biden_updatenews360
Quick Share

அமெரிக்காவில் நாளை நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் எதிர் எதிராக மோதும் ட்ரம்பும், ஜோ பைடனும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

46வது அதிபர் தேர்தல் அமெரிக்காவில் நாளை நடைபெற உள்ளது. அதில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக, தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2வது முறையாக போட்டியிடுகிறார். ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் களத்தில் உள்ளார்.

joe-trumph-updatenews360

கொரோனா பரவலின் அச்சத்திற்கு இடையில் தேர்தல் நடைபெற இருந்தாலும், கடந்த தேர்தல்களை ஒப்பிடும்போது, அமெரிக்க மக்கள் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஏற்கனவே 8 கோடியே 50 லட்சம் பேர் தங்களது வாக்குகளை முன்கூட்டியே செலுத்தி விட்டனர்.

நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் தீவிர இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மிச்சிகனில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 2 பிரச்சார பேரணிகளில் பங்கேற்றார். இந்த பேரணிகளில் முன்னாள் அதிபர் ஒபாமா கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

Views: - 16

0

0