பூனைக்குட்டியை மீட்ட மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் விட்ட தீயணைப்பு படைவீரர் – நெஞ்சை உலுக்கும் வீடியோ

3 May 2021, 12:00 pm
Quick Share

குழியில் விழுந்த பூனைக்குட்டியை, தீயணைப்பு படை வீரர் ஒருவர் மிகுந்த சிரமத்திற்கு இடையே மீட்டு, அந்த மகிழ்ச்சியில், அவர் ஆனந்த கண்ணீர் விட்ட வீடியோ, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இத்தாலி நாட்டில் சாலையில் உள்ள ஒரு குழியில், குட்டிப் பூனை ஒன்று விழுந்துவிட்டது. அந்த குழி, ஓரத்தில் இருந்ததால், யாராலும் அவ்வளவு சீக்கிரமாக அதை பார்த்துவிட முடியாது. இந்நிலையில், அந்த பூனைக்குட்டி, தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தது.

பூனையின் சத்தத்தை கேட்ட ஒருவர், குட்டிப் பூனையை மீட்கும் நடவடிக்கையாக, தீயணைப்புத்துறையை தொடர்பு கொண்டார்.
அப்போது சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் வந்தனர். குழியில் விழுந்த பூனையை, மிகுந்த போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். அந்த பூனையை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரருக்கு மீட்ட மகிழ்ச்சியில் அவருக்கு ஆனந்தக்கண்ணீரே விட்டுவிட்டார். அவரை சக ஊழியர்கள் ஆசுவாசப்படுத்தினர். இந்த வீடியோவை, பார்ப்பவர்களின் மனதை உலுக்கும் விதமாக உள்ளது.

இந்த வீடியோவிற்கு, பூனைக்குட்டியை மீட்ட தீயணைப்பு படை வீரர், ஆனந்த கண்ணீர்விட்டார் என்று தலைப்பு இடப்பட்டு உள்ளது. இந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ, இணையத்தில் வெளியாகி 3 மணிநேரத்திற்கு உள்ளாக கிட்டத்தட்ட 2 லட்சம் முறை பார்வை இடப்பட்டு உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் ரீடுவிட்டுகளை, இந்த வீடியோ, சிலமணிநேரங்களில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 127

0

0

Leave a Reply