ஆப்கானிஸ்தானில் சாலையோரம் குண்டுவெடிப்பு: 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!

20 October 2020, 5:19 pm
afkan terrorism - updatenews360
Quick Share

காபூல்: ஆப்கானிஸ்தானில் சாலையோரம் வைக்கப்பட்ட இரு குண்டுகள் வெடித்ததில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் மைதான் வார்தக் மாகாணத்தில் ஜல்ரெஜ் மாவட்டத்தில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது. இந்த வெடிகுண்டு சம்பவம் பற்றிய தகவலை மாகாண கவர்னர் அலுவலகம் உறுதிப்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் கோர் மாகாணத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் பிரோஷ் கோ நகரில் காவல் அலுவலகத்திற்கு வெளியே நடந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர். 90 பேர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் நீண்ட கால போர் நடந்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனினும், இதில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. ஒருபுறம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோதிலும், மறுபுறம் பயங்கரவாத தாக்குதல்களிலும் அந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

Views: - 19

0

0