ஒரு கிலோ வாழைப்பழம் ரூ.3000க்கு விற்பனை: உணவுப் பஞ்சத்தில் சிக்கித்தவிக்கும் வடகொரியா…குறைவாக சாப்பிட அதிபர் உத்தரவு..!!

Author: Aarthi Sivakumar
28 October 2021, 1:11 pm
Quick Share

பியாங் யாங்: வடகொரியாவில் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடுவதாலும் நாட்டுமக்களை குறைவாக சாப்பிடும்படி அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வடகொரியாவில் பயிர்கள் சேதம் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவாக, இதனால் அங்கு ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை 45 டாலர், 32 யூரோவாக இருக்கிறது.

அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3,300 ஆகும். வட கொரிய மக்கள் மிகக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா பரவியதால் வடகொரியாவுக்கு நோய் தொற்று வந்துவிடக்கூடாது என்பதற்காக அதிபர் கிம் ஜாங் உன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.

வடகொரியாவுக்கு சீனாவில் இருந்துதான் பல்வேறு உதவிப்பொருட்கள் வந்து கொண்டு இருந்தன. அவற்றுக்கும் தடை விதித்தார். இதன் காரணமாக பொருட்கள் வருவது தடைப்பட்டது. மேலும், விவசாயத்துக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்து போன்றவையும் இறக்குமதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக, விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் 2025ம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற அதிபரின் உத்தரவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வட கொரியாவின் சினுயிஜு நகரத்தில் வசிப்பவர்கள் கூறுகையில், 2025 வரை அரசு மக்களை குறைவாக உணவு உண்ணச் சொல்கிறது. இது எப்படி சாத்தியம் ஆகும்.

இப்போதே உணவுக் கையிருப்பு நிலை மிகவும் மோசமாக நிலையிலேயே உள்ளது. தினமும் உணவு பற்றாக்குறையால் கடுமையாகத் தவித்து வருகிறோம். எங்களுக்கு உணவு பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை? என அவர்கள் கூறினர்.

அரசுத் தரப்பில், வட கொரியா கொரோனாவைக் கட்டுப்படுத்தவே எல்லைகளை மூடியது. அதன் பலனை வட கொரியா அடைந்துள்ளது. அதேபோல் உணவுப் பஞ்சத்தையும் சமாளித்துக் கடந்து வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Views: - 839

0

0