மாரடோனா காலமானார்: அதிர்ச்சியில் கால்பந்து ரசிகர்கள்…!!

26 November 2020, 6:03 am
maradnana - updatenews360
Quick Share

பியுனஸ் ஏர்ஸ் :கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார்.

கால்பந்தின் ‘ஜாம்பவான்’ மாரடோனா, உலக கோப்பை தொடரில் 4 முறை (1982, 86, 90, 94) விளையாடினார். 1986ல் இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி உலக கோப்பை வென்றது. கிளப் அரங்கில் நாபோலி, போகா ஜூனியர்ஸ், பார்சிலோனா அணிகளுக்காக விளையாடினார்.

2008 முதல் 2010 வரை அர்ஜென்டினா அணி பயிற்சியாளராக செயல்பட்டார். சமீபத்தில் மாராடோனா மூளையில் ரத்தம் உறைந்திருந்தது தெரியவர, பியுனஸ் ஏர்சின், லா பிளாட்டா பகுதியில் உள்ள மருத்துமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். இங்கு இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.எட்டு நாட்களுக்குப் பின் நவ. 11ல் வீடு திரும்பினார். சிறிது சிறிதாக மீண்டு வந்தார்.

நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதை அவரது வக்கீல் மதியாஸ் மோர்லா உறுதி செய்தார். அர்ஜென்டினா கால்பந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,’எங்களது ‘ஜாம்பவான்’ மாரடோனா மரணம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் எப்போதும் எங்கள் இதயத்தில் நிறைந்திருப்பீர்கள் என தெரிவித்துள்ளது.

Views: - 18

0

0