வச்சு செய்யும் கொரோனா..! பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல்..! அதிபர் அதிரடி உத்தரவு..!

Author: Sekar
15 October 2020, 9:42 am
France_UpdateNews360
Quick Share

பிரான்சில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரன், பிரான்சின் பல பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளார்.

ஜூலை முதல் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கையில் பிரான்ஸ் மீண்டும் எழுச்சி கண்டது. அக்டோபர் 10 அன்று தினசரி அதிகபட்சமாக 27,000 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. நேற்றைய நிலவரப்படி, நாட்டில் 7,56,472 கொரோனா பாதிப்புகளும் 32,942 இறப்புகளும் பதிவாகியுள்ளன.  

இந்நிலையில் பாரிஸ், லில்லி, லியோன், மார்சேய், துலூஸ் உள்ளிட்ட பல நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரன் பிரான்சில் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு சனிக்கிழமை தொடங்கி நான்கு வாரங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை மணி வரை அமலில் இருக்கும்.

“ஆம், நாங்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவு ஒரு போதுமான நடவடிக்கை என கருதுகிறோம்” என்று மேக்ரன் தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு ஐலே-டி-பிரான்ஸ் பிராந்தியத்திலும், அதே போல் லில்லி, கிரெனோபில், லியோன், மார்சேய், ரூவன், செயிண்ட்-ஐடென், மான்ட்பெல்லியர், துலூஸ் ஆகிய இடங்களிலும் செயல்படும் என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.

கொரோனாவின் இரண்டாவது அலையில் பிரான்ஸ் சென்று கொண்டிருந்தாலும் கட்டுப்பாட்டை இழக்கவில்லை என மேக்ரன் கூறினார். “நாங்கள் கட்டுப்பாட்டை இழக்கவில்லை. ஆனால் நாங்கள் கவலைப்படுகின்ற ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம். தொற்றுநோயின் முதல் அலையிலிருந்து கிடைத்த அனுபவத்தின் மூலம் முடிவுகளை எடுத்துள்ளோம்.” என்று அவர் கூறினார்.

“உண்மையில், இப்போது எட்டு மாதங்களாக நமக்குத் தெரிந்த வைரஸ் திரும்பி வருகிறது. நாங்கள் பெரும்பாலும் இரண்டாவது அலை என்று அழைக்கப்படும் சூழ்நிலையில் இருக்கிறோம்” என்று பிரெஞ்சு அதிபர் மேலும் கூறினார்.

முன்னதாக பிரிட்டன் கொரோனாவின் இரண்டாவது அலையால் மூன்றடுக்கு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில், தற்போது பிரான்சும் ஊரடங்கை கையெலெடுத்துள்ளதன் மூலம் ஐரோப்பிய நாடுகள் மீண்டும் கொரோனாவின் அவலத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது

Views: - 47

0

0