2020ஐ தூக்கி சாப்பிடப் போகுது 2021; மனிதகுலத்துக்கு அழிவு துவங்குமாம்!

By: Poorni
3 January 2021, 9:01 am
Quick Share

மனித குலத்தின் அழிவுக்கான துவக்கமாக, 2021ம் ஆண்டு இருக்கும் என, 465 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, பிரபல பிரான்ஸ் ஜோசியர் நாஸ்ட்ராடமஸ் கணித்துள்ளார். மேலும், ஜாம்பி, மிகப் பெரிய அளவில் பஞ்சம், பெரிய விண்கலம் பூமியை தாக்கும் என அவர் கணித்து கூறியுள்ளார்.

கடந்த 15ம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தவர் மைக்கேல் நாஸ்ட்ரடாமஸ். 1503 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெற்கு பிரான்சிலுள்ள செயின்ட் ரெமிடியில் பிறந்தார். பிரபல ஜோதிடரான அவர், வரவருக்கும் 3797 ஆம் ஆண்டு வரைக்கும், என்ன நடக்கும் என தன் கணிப்புகளை கூறியுள்ளார். தனது எண்ணங்களை 4 வரி பாடல்களாக அவர் பதிவு செய்துள்ளார். அதில் மனித குலத்தின் எதிர்காலங்களை 465 ஆண்டுகளுக்கு முன் கணித்து, அது எப்படி இருக்கும் என கூறியுள்ளார்.

அவரது பாடல்கள் அடங்கிய நூல், 1955 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, உலக மக்களை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. அவரது கணிப்புகளில் பல அப்படியே நடந்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எப் கென்னடி சுட்டுக் கொலை செய்யப்பட்டதையும், அமெரிக்காவில், செப்டம்பர் 11 விமான தாக்குதலையும், அடால்ப் ஹிட்லரின் வளர்ச்சியையும் அவர் சரியாக கணித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு என்னவெல்லாம் நடக்கும் என அவர் கணித்துள்ளார் தெரியுமா..? ஜாம்பியாக மக்கள் மாறுவார்களாம். அதாவது, பேய்களை போல மனிதர்களை வேடையாடி கொல்பவர்களாக மாறுவார்களாம். ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கும் ‘‘பயோ வெப்பன்கள்’’, மனித குலத்தின் அழிவின் துவக்கமாக இருக்குமாம். அத்துமட்டுமின்றி, கொடிய நோய் தொற்றுகள் பரவுமாம்.. பஞ்சமும், பூகம்பமும் ஏற்படுமாம்.. மூன்றாம் உலகப்போர் மூளுமாம்…

மேலும், பெரிய விண்கல் ஒன்று பூமியை தாக்கும் என்றும், அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் கடும் பூகம்பம் ஏற்படும் எனவும் அவர் தனது கணிப்பில் தெரிவித்துள்ளார்… அவர் கணிப்பின்படி, 2021 ஆம் ஆண்டு, நமக்கு கஷ்டம் மகுந்த ஆண்டாக இருக்கப்போகிறது..! அப்போ 2020 ஆம் ஆண்டே பரவாயில்லை என உங்கள் மனம் கூறுகிறதா!!

Views: - 100

0

0