ஜப்பான் பிரதமர் யோஷிஹிதே சுகா பதவி விலகல்: புதிய பிரதமராக தேர்வானார் புமியோ கிஷிடே…!!
Author: Aarthi Sivakumar29 September 2021, 3:53 pm
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் ஆளும் கட்சி தலைமைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து புதிய பிரதமராக புமியோ கிஷிடே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்துவந்த ஷின்சோ அபே உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு பதவி விலகினார். இதனையடுத்து யோஷிஹிதே சுகா புதிய பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில், அதிருப்தி காரணமாக யோஷிஹிதே சுகா கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தனர். ஜப்பானில் ஆளுங்கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக பொறுப்பேற்பார் என்பதால் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டின் பிரதமராக புமியோ கிஷிடா பதவியேற்க உள்ளார். நடைபெற்ற பிரதமர் தேர்தலில், புமியோ கிஷிடா 257 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து நின்ற கோனோ 170 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.
புமியோ கிஷிடா ஏற்கனவே 2012 – 2017ல் ஜப்பானின் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற கட்சித் தலைவருக்கான தேர்தலில் தற்போதைய பிரதமர் யோஷிஹிதே சுகாவிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0
0