அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு:ஒருவர் பலி

Author: Udhayakumar Raman
24 October 2021, 9:33 pm
Quick Share

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் சுட்டதில் ஒருவர் பலியானதை தொடர்ந்து போர்ட்வேலி பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பல்கலைக்கழகம், பள்ளிகள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடக்கின்றன. இந்தநிலையில் அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் உள்ள போர்ட் வேலி அரச பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதி அருகே மர்ம நபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதுடன் 8 பேர் காயமடைந்தனர்.உயிரிழந்தவர் மாணவர் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஏழு பேரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமானவர்களை அடையாளம் காண புலனாய்வாளர்கள் உதவி கோருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து போர்ட்வேலி பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.

Views: - 625

0

0