மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா..! ஜெர்மனியிலும் நாடு தழுவிய ஊரடங்கு அமலானது..!

2 November 2020, 11:56 am
Germany_Lockdown_UpdateNews360
Quick Share

கொரோனாவின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த ஜெர்மனி முழுவதும் இன்று முதல் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது. 

இது தொடர்பாக ஒரு தொலைக்காட்சி உரையில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் புதிய ஊரடங்கு நடவடிக்கைகளை அறிவித்தார். இன்று முதல் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை அமல்படுத்த மாநிலங்களுடன் ஜெர்மனியின் மத்திய அரசு ஒரு உடன்படிக்கைக்கு வந்துள்ளது.

ஜெர்மனிய பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தை ஸ்தம்பித்த முதற்கட்ட ஊரடங்குடன் ஒப்பிடும்போது, இந்த ஊரடங்கில் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஏஞ்செலா மெர்க்கெல் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், நாடு மிகவும் மோசமான சூழ்நிலையில் இருப்பதாக கூறியதோடு, கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமெடுப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

தேசிய சுகாதார அவசரநிலையைத் தவிர்ப்பதற்காக தற்போது இதை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் மேலும் கூறினார்.

ஜெர்மனியில் நோய்த்தொற்று காரணமாக ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 10 நாட்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுத்து வரும் நிலையில், முன்னதாக பிரான்சும், பிரிட்டனும் ஒரு மாதத்திற்கு நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில், தற்போது ஜெர்மனியும் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குள் செல்கிறது.

Views: - 21

0

0