இலங்கையில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத கோமராசி மீன்: போராடி கடலினுள் விட்ட மீனவர்கள்..!!

Author: Aarthi Sivakumar
25 September 2021, 4:22 pm
Quick Share

இலங்கை: கட்டைக்காடு கடற்பகுதியில் மீனவர் வலையில் பிடிபட்ட அரியவகை ராட்சத புள்ளி சுறா மீன் கடலுக்குள் விடப்பட்டது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மீனவர்களின் வலையில் கோமராசி மீன் ஒன்று நேற்று மாலை சிக்கியுள்ளது. கட்டைக்காடு பகுதியில் கரைவலை சம்மாட்டியான டொன்ஸ் என்பவரின் வலையிலேயே மிகப் பெரிய கோமராசி மீன் ஒன்று அகப்பட்டுள்ளது.

சுமார் 8 அடி நீளம் கொண்ட இந்த மீனை இயந்திரம் மூலம் கரைக்கு மீனவர்கள் கட்டி இழுத்து வந்தனர். கோமராசி அல்லது புள்ளிச் சுறா என அழைக்கப்படும் மீனை வலையில் இருந்து அகற்றி மீனவர்களால் மீண்டும் கடலினுள் விட்டனர்.

ஆழ்கடலில் வசிக்கும் இந்த மீன்கள் சில நாட்களாக கரைக்கு வந்து போவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். வலைகளுக்கு நடுவே அதிகளவான மீன்கள் வந்த போதிலும் கோமராசி மீனின் வருகையால் மீன்கள் எதுவும் பிடிபடவில்லை எனவும் மீனவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இருப்பினும், வலையில் பிடிபட்ட இந்த அரியவகை புள்ளி சுறாவை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.

Views: - 273

0

0