தேர்தல் என்ற பெயரில் மோசடி..! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்தது வன்முறை..!

26 November 2020, 6:53 pm
POK_Violence_Against_Imran_Khan_UpdateNews360
Quick Share

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அங்கமான  கில்கிட்-பால்டிஸ்தானுக்கு நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் இன்று பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 

பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் மோசடி செய்வதன் மூலம் அதிகபட்ச இடங்களை வென்றதாக மக்கள் குற்றம் சாட்டினர்.

கில்கிட்-பால்டிஸ்தானில் 23 சட்டமன்ற இடங்களில் இம்ரான் கானின் பி.டி.ஐ பெரும்பான்மை இடங்களை வென்றது.

கில்கிட்-பால்டிஸ்தானில் தேர்தல்களை நடத்தியதற்காக இந்திய அரசாங்கம் பலமுறை பாகிஸ்தானை கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
1947 முதல் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான இந்த பகுதியை பாகிஸ்தான் சட்டவிரோதமாக கைப்பற்றி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே உள்ள நிலையை மாற்ற பாகிஸ்தான் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையும் சட்டப்பூர்வமானதல்ல என இந்தியா தொடர்ந்து கண்டித்து வருகிறது.

கில்கிட்-பால்டிஸ்தான் தேர்தல் 2020 சட்டமன்றத்தின் 23 இடங்களில் நவம்பர் 15 அன்று கடுமையான பாதுகாப்புக்கு இடையே நடைபெற்றது. பாகிஸ்தான் அரசு கில்கிட்-பால்டிஸ்தான், பஞ்சாப், கைபர் பக்துன்க்வா, சிந்து மற்றும் பலூசிஸ்தான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களை வாக்குச் சாவடிகளில் நிறுத்தி தேர்தலை நடத்தி முடித்தது.

ஏற்கனவே, ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தானை வெளியேறுமாறு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், தற்போது தேர்தல் என்ற பெயரில் தனக்கு சாதகமான ஆட்சியை நிறுவ முயல்வதால் மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் தற்போது பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

Views: - 23

0

0