“ஜேஇஇ, நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்”..! இளம் சுற்றுச்சூழல் போராளி கிரெட்டா துன்பெர்க் கோரிக்கை..!

25 August 2020, 2:37 pm
Greta_Thunberg_Updatenews360
Quick Share

இந்தியாவில் செப்டம்பரில் நடக்க உள்ள ஜேஇஇ, நீட் 2020 தேர்வுகளை ஒத்திவைக்க குரல்கொடுத்து வரும் மாணவர்களுக்கு, ஸ்வீடன் நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மாணவர்கள் ஆதரவாக முன்வந்துள்ளார்.

காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக பிரச்சாரம் செய்த ஒரு வருடம் கழித்து மீண்டும் பள்ளிக்கு வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் அதே வேளையில், இந்த செப்டம்பரில் தொற்று நோய்க்கு மத்தியில் நுழைவுத் தேர்வுக்குத் தோன்றும் அனைத்து மாணவர்களுக்கும் கிரெட்டா தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக கிரெட்டா வெளியிட்டுள்ள டிவீட்டில், தேர்வு எழுதும் மாணவர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். “இந்திய மாணவர்கள் கொரோனா தொற்றுநோய்களின் போது தேசிய தேர்வுகளை எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்படுவது மிகவும் நியாயமற்றது. அதே நேரத்தில் மில்லியன் கணக்கானவர்களும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். #PostponeJEE_NEETinCOVID’க்கான அவர்களின் அழைப்போடு நான் நிற்கிறேன்.” என தன்னுடைய டிவீட்டில் தெரிவித்துள்ளார்.

தேர்வுகளை ஒத்திவைப்பதற்கான கோரிக்கையில், கிரெட்டா துன்பெர்க் இணைந்துள்ள நிலையில், நாளுக்கு நாள் அனைத்து தரப்பிலும் குரல் வலுத்து வருகிறது. இது வரை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், சுப்பிரமணியன் சுவாமி, யுவ நேதா ஆதித்யா தாக்கரே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஏற்கனவே தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனர். மேலும் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளனர்.

ஜேஇஇ மெயின் 2020 தேர்வு செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6, 2020 வரையிலும் நீட் 2020 தேர்வு செப்டம்பர் 13’ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. என்.டி.ஏ ஏற்கனவே ஜே.இ.இ மெயினுக்கான அட்மிட் கார்டை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் நீட் தேர்விற்கான அட்மிட் கார்டை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 36

0

0