உயிரை பணயம் வைத்து சிங்க குட்டியை காப்பாற்றிய வன ஊழியர்! வைரல் வீடியோ

7 March 2021, 4:58 pm
Quick Share

வலையில் சிக்கி கொண்ட சிங்க குட்டியின் கழுத்தை வலை நெறிக்க, அதனை தங்கள் உயிரை பணயம் வைத்து வன ஊழியர்கள் காப்பாற்றி உள்ளனர். குஜராத்தில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

மூத்த இந்திய வன சேவை அதிகாரி ரமேஷ் பாண்டே, டுவிட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். வலையில் சிக்கிய ஒரு சிங்க குட்டியைக் காப்பாற்ற குஜராத்தில் வன ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர் என அவர் அந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். வீடியோவில், சிங்க குட்டியை வலையிலிருந்து காப்பாற்ற, வன ஊழியர்கள் குழு எவ்வாறு கடுமையாக உழைத்தது என்பது பதிவாகி உள்ளது. கிரேட்டர் கிர் ராஜுலாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குஜராத் கிரேட்டர் கிர் ராஜுலாவில், கர்ஜனையை கேட்டு சென்ற வன ஊழியர்களுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அங்கு வலையில் சிங்க குட்டி ஒன்று சிக்கி கொண்டிருந்தது. குட்டியின் கழுத்தை வலை நெறித்தால் அதன் உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே தங்கள் உயிரை பணயம் வைத்த வன ஊழியர்கள், சிங்க குட்டியை காப்பாற்றினர். அப்போது சிங்கமும் மற்ற குட்டிகளும் அருகே அமர்ந்திருந்தன.

வலையில் சிக்கி கொண்டதால், குட்டி ஆக்ரோஷமாக இருப்பது வீடியோவில் தெரிகிறது. 5 பேர் ஒன்றாக இணைந்து குட்டியின் ஆக்ரோஷத்தை தணித்து, வலையை துண்டித்து குட்டியை காப்பாற்றி உள்ளனர். தாய் சிங்கம் தங்களை தாக்கும் என்ற அச்சத்துடன் அவர்கள் குட்டியை காப்பாற்ற, குட்டி துண்டிக்கப்பட்ட வலையிலிருந்து வெளிவருவதுடன் வீடியோ முடிகிறது. இந்த வீடியோவை இதுவரை 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். வன ஊழியர்களின் தைரியத்தை பாராட்டி பலரும் தங்கள் கமெண்ட்ஸ்களை பதிவிட அது வைரலானது.

Views: - 1

0

0