ஹைதி நாட்டு அதிபர் ஜோவ்நெல் மோய்ஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

7 July 2021, 5:57 pm
haiti prez murder 1 - updatenews360
Quick Share

ஹைதி நாட்டு அதிபர் ஜோவ்நெல் மோய்ஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதி நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் கொரோனா பாதிப்பு ஆகியவற்றினால், அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிபர் ஜோவ்நெல்லின் மோசமான நிர்வாகத்தினால்தான் இந்த பொருளாதார சுமை ஏற்பட்டதாக அந்நாட்டு மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று அதிகாலை அதிபர் ஜோவ்நெல் மோய்ஸின் வீட்டிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்மநபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். மேலும், அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, தற்போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை பிரதமர் க்ளாட் ஜோசப் ஏற்றுக் கொண்டார். ஹைதி நாட்டில் அதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 209

0

0