16 வருடங்களுக்கு முன்பு திருடு போன கைப்பை மீட்பு..! ஆச்சரியப்பட வைத்த ஆஸ்திரேலியப் போலீஸ்..!

9 August 2020, 2:04 pm
Stolen_bag_16_years_australia_New_south_wales_updatenews360
Quick Share

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள மோரி காவல்துறையினர் இந்த வார தொடக்கத்தில் திருடு போன ஒரு கைப்பையை மீட்டுள்ளனர். இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், அந்த கைப்பை 16 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனது தான்.

இந்த கைப்பை கிராமப்புற நியூ சவுத் வேல்ஸில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பேஷன் பூட்டிக்குகளில் ஒன்றான அஸ்ஸெஃப்பின் கார் பார்க்கில், அப்பகுதியில் உள்ள சில கட்டுமானத் தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜூலை 2004’இல் ஹெர்பர் மற்றும் ஆபர்ன் ஸ்ட்ரீட் சந்திப்புக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த உரிமையாளரின் காரின் பின்புறத்திலிருந்து கைப்பை திருடப்பட்டது.

கொள்ளை நடந்த சில நாட்களுக்குப் பிறகு, மோரி ரயில் நிலையம் அருகே கைப்பையில் இருந்த சில பொருட்கள் மட்டும் மீட்கப்பட்டன.

இருப்பினும், கைப்பை மற்றும் அதனுள் பெரும்பாலான பொருட்கள் 16 ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்ஸெப்பின் கார் பார்க்கில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இழந்த மற்றும் திருடப்பட்ட பொருட்களை மக்கள் புகாரளிக்க வேண்டியது ஏன் முக்கியம் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது என்று மோரி காவல்துறை பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பர்க் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்த கைப்பையின் அம்சங்கள் 2004’ஆம் ஆண்டில் திருடப்பட்ட கைப்பையுடன் ஒத்துப்போயுள்ளது. சின்னத் திருட்டாக இருந்தாலும் அதை நீங்கள் புகாரளித்தால், அவற்றை மீண்டும் கண்டுபிடித்து கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதை இது காட்டுகிறது.” என்றார்.

எனினும் 2004’ல் கைப்பை திருடுபோனதாக புகாரளித்த உரிமையாளர் தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில், போலீசார் கைப்பையின் உரிமையாளரை அணுகவும் தொடர்பு கொள்ளவும் முயற்சிக்கின்றனர்.