அமெரிக்க வரலாற்றில் முதல்முறை..! நாடு கடந்த திபெத்திய அரசாங்க தலைவரை நேரில் சந்தித்த அமெரிக்க உயரதிகாரி..!

16 October 2020, 5:57 pm
Lobsang_Sangay_UpdateNews360
Quick Share

திபெத்திய பிரச்சினைகளைக் கையாள ஒருங்கிணைப்பாளராக அமெரிக்கா நியமித்த ராபர்ட் ஏ டெஸ்ட்ரோவை சந்திக்க, நாடு கடந்த திபெத்திய அரசாங்க தலைவரான லோப்சாங் சங்கே ஆறு தசாப்தங்களில் முதல் முறையாக அமெரிக்க வெளியுறவுத் துறையால் அழைக்கப்பட்டுள்ளார்.

மத்தியதிபெத்திய நிர்வாகத்தின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரின் சந்திப்புக்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ ஒப்புதல் அளித்ததற்காக வெளியுறவுத்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

“திபெத்திய பிரச்சினைகள் குறித்த சிறப்பு ஒருங்கிணைப்பாளரான ராபர்ட் எ டெஸ்ட்ரோவை மரியாதைக்குரிய முறையில் சந்தித்தேன். ஆறு தசாப்தங்களில் இதுவே முதல் முறை. மத்திய திபெத்திய நிர்வாகத்தின் ஒரு தலைவர் முறையாக அமெரிக்க வெளியுறவுத்துறைக்குள் அழைக்கப்பட்டார். இதன் மூலம் புதிய வரலாறு இன்று உருவாக்கப்பட்டது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 14 அன்று திபெத்திய சிக்கல்களுக்கான அமெரிக்க சிறப்பு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுவதற்காக மைக் பாம்பியோ டெஸ்ட்ரோவை நியமித்தார்.

இந்த சந்திப்பு குறித்து பதிலளித்த சீனா, திபெத்திய பிரச்சினைகளுக்கு சிறப்பு ஒருங்கிணைப்பாளரை நியமித்ததற்காக அமெரிக்காவை விமர்சித்ததுடன், அமெரிக்காவின் நடவடிக்கை திபெத்தை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தும் அரசியல் கையாளுதல் என்று விவரித்தது.

சீன அதிகாரிகள் திபெத்தை ஜிசாங் என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

“சீனா அதை உறுதியாக எதிர்க்கிறது. அதை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. ஜிசாங்கில் உள்ள இனக்குழுக்கள் சீன தேசத்தின் பெரிய குடும்பத்தின் ஒரு பகுதியாக உள்ளனர்” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறினார்.

சீனாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாகவும் ஜாவோ குற்றம் சாட்டினார்.

சீனாவில் கம்யூனிஸ்ட் நடத்தும் அரசாங்கத்திற்கும் பாம்பியோவுடன் தலாய் லாமாவுக்கும் இடையிலான உரையாடலை முன்னெடுக்கும் பணி டெஸ்ட்ரோவுக்கு வழங்கப்பட்டுள்ளது, திபெத்தியர்களின் தனித்துவமான மத கலாச்சார மற்றும் மொழியியல் அடையாளத்தை பாதுகாப்பதும் அவர்களின் மனித உரிமைகளுக்கான மரியாதையை மேம்படுத்துவதும் அவரது முன்னுரிமை என்று கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பரில், தலாய் லாமாவின் வாரிசு பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் செல்ல அமெரிக்கா திட்டமிட்டபோது, சீனா அமெரிக்கா மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தது.

அமெரிக்கா தனது உள் விவகாரங்களில் தலையிட ஐ.நா. தளத்தை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி, தற்போதைய தலாய் லாமாவின் வாரிசுக்கு அதன் ஒப்புதல் அவசியம் என்று சீனா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply