ஹா.. ஹா.. ‘இவர் ஒரு சீரியல் கில்லர்’: என்ன பண்றாரு பாருங்க?

17 January 2021, 11:12 am
Quick Share

சூடான பீட்ஸாவை, குழாய் நீரில் வைத்து குளிர்வித்து, அதனை ஒருவர் சாப்பிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அவரது மனைவி இதனை டுவிட்டரில் பதிவிட, ‘இவர் ஒரு சீரியல் கில்லர்’ என அழைத்து, நெட்டிசன்கள் வயிறு வலிக்க சிரித்து வருகின்றனர்.

சிலருக்கு எப்போதும் உணவுகளை சூடாக சாப்பிடுவது பிடிக்கும். சிலருக்கு ஆறிய பின் சாப்பிடுவது பிடிக்கும். சூடான உணவை ஆற வைக்க, சிலர் காத்திருந்து பொறுமையாக சாப்பிடுவர்; சிலர் ஃபேனுக்கு அடியில் வைத்து ஆற வைத்து பின் உண்பர். ஆனால் இவர் கடைபிடிக்கும் அணுகுமுறை வித்தியாசமாக இருக்க அது அனைவரின் பார்வையும் பட காரணமாயிருக்கிறது. அப்படி என்ன பண்ணினார் தெரியுமா?

இது குறித்து ரெடிட் வலைதளத்தில், பெண் ஒருவர் வீடியோவுடன் கருத்து ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், ‘என் கணவர் பல ஆண்டுகளாக பீட்ஸாவை இப்படி தான் சாப்பிடுகிறார். சூடாக இருக்கும் பீட்ஸாவை குழாய் தண்ணீரில் குளிர்வித்து சாப்பிடும் பழக்கம் உள்ளது. கல்லூர் காலம் முதல், நாங்கள் பீட்ஸாவை தயார் செய்து வருகிறோம். அப்போதும் அவர் தான் இப்படி தான் செய்வார். குளிர்வித்தாலும் அதன் சுவை மாறவில்லை எனவும் கூறுகிறார்’ என பதிவிட்டார்.

தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அவரை நெட்டிசன்கள் பலரும் அவரும் ‘சீரியல் கில்லர்’ என அழைத்து வருகின்றனர். ஒருவர், ‘தயவு செய்து வீட்டை விட்டு வெளியேறுங்கள். அவர் ஒரு சீரியல் கில்லர்’ என பதிவிட்டுள்ளார். மற்றொருவர் ‘பிரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடலாமே. எதற்காக நீரில் நனைக்கிறீர்கள்’ என பதிவிட்டுள்ளார்.

Views: - 8

0

0