இந்திய விமானங்களுக்கு 15 நாட்கள் தடை: கொரோனா அச்சம் காரணமாக ஹாங்காங் அதிரடி அறிவிப்பு..!!

19 April 2021, 11:28 am
hongkong flight - updatenews360
Quick Share

ஹாங்காங்: கொரோனா அதிகரிப்பு காரணமாக நாளை முதல் வரும் மே 3ஆம் தேதி வரை இந்திய இணைப்பு விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக வேகமாக அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.

இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகியவற்றிலிருந்து வரும் விமானங்களுக்கு, ஹாங்காங் தற்காலிகத் தடை விதித்துள்ளது. ஹாங்காங்கில், முதன்முறையாக N501Y ரகக் கிருமி கண்டறியப்பட்டதால், அந்த முடிவு எடுக்கப்பட்டதாக, அந்நாட்டு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

கடந்த இரு வாரங்களாக, அந்த 3 நாடுகளிலிருந்து ஹாங்காங்கிற்குச் சென்றுள்ள வெளிநாட்டினர் பலரிடம், அந்தக் கிருமி வகை அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ‘மிக அதிக ஆபத்துமிக்கவை’ என்று வகைப்படுத்தப்படும். தற்காலிகத் தடை, நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், Cathay Pacific, Hong Kong Airlines, Vistara, Cebu Pacific உள்ளிட்ட சில விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

Views: - 74

0

0