என்னது இது எல்லாம் உலக தலைவர்களின் மெழுகு சிலையா? சொல்லவேயில்லை? – வைரலாகும் பிரேசில் மெழுகு சிலைகள்

16 January 2021, 12:08 pm
Quick Share

இந்த உலகில் மெழுகு சிலை வடிவமைப்பாளர்களின் திறமைகளைப் பற்றி உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியது இல்லை. ஒரு மனிதனைத் தத்ரூபமாகச் சிலையாக வடிவமித்து அதை காட்சிப்படுத்துவதில் இந்த கலைஞர்களை மிஞ்ச முடியாது. பல நேரங்களில் உண்மையாகவே ஒரு ஆள் இருப்பது போன்ற சிலைகளை எல்லாம் மெழுகு சிலை கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர்.

இந்நிலையில் பிரேசில் நாட்டில் அரலின்டோ ஆர்மாக்கோலோ என்ற மெழுகு சிலை கலைஞரின் மெழுகு சிலை கண்காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்நாட்டின் லோக்கல் டிவி ஒன்று இவரின் மெழுகு சிலை அருங்காட்சியகத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில் உள்ள மெழுகு சிலைகளில் உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரது சிலைகள் இருந்தது. மகாத்மா காந்தி, ஹிட்லர், ஐன்ஸ்டீன், டயானா, நெல்சன் மண்டேலா, எலிசெபத் ராணி, உள்ளிட்ட பலரின் சிலைகள் இருந்தது. ஆனால் இந்த சிலைகளை அடையாளம் கண்டுபிடிப்பதற்கே சற்று சிரமமான விஷயமாக இருக்கிறது. சிலை மிக மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அந்த சிலை வடிவமைப்பாளர் கூறும் போது : “இந்த சிலைகளை நான் காசுக்காகச் செய்யவில்லை. இதைச் செய்ததில் எனக்குச் சந்தோஷம் தான். இதைப் பிடித்திருந்தால் மக்கள் வந்து பார்க்கட்டும், பிடிக்கவில்லை என்றால் வரவேண்டாம். இதைத் தயாரிக்க 5 கிலோ மெழுகை இறக்குமதி செய்து தயாரித்து எனது தந்தையின் பெயரில் காட்சிப்படுத்தியுள்ளேன்”எனக்கூறினார்.

இந்த படங்களில் உள்ள மெழுகு சிலை எல்லாம் யார் என்று பார்த்து கமெண்டில் சொல்லுங்கள்.

Views: - 0

0

0