சவூதி அரேபிய விமான தளங்கள் மீது ஏமன் போராளிக்குழு ட்ரோன் வெடிகுண்டு தாக்குதல்..!

12 April 2021, 3:03 pm
Trone_Attack_Houthi_Saudi_UpdateNews360
Quick Share

தென்மேற்கு சவுதி அரேபியாவில் உள்ள ஜிசான் விமான நிலையம் மற்றும் கிங் காலித் விமானநிலையம் நோக்கி வெடிகுண்டு ஏந்திய ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஏமனின் ஹவுதி போராளிகள் தெரிவித்தனர்.

“இந்த தாக்குதல்கள் ஜிசான் நகரில் உள்ள விமான நிலையத்தில் மற்றும் காமிஸ் முஷைட் நகரத்தில் உள்ள கிங் காலித் விமானநிலையத்தை குறிவைத்தன” என்று ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யேஹியா சாரியா அல் மசிரா டிவி ஒளிபரப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சவூதிக்கு சொந்தமான அல் அரேபியா டிவி, சவூதி தலைமையிலான கூட்டணி ஹமீஸ் போராளிகளால் காமிஸ் முஷைட்டை நோக்கி ஏவப்பட்ட வெடிபொருள் நிறைந்த ட்ரோனை தடுத்து நிறுத்தியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

சவூதி நகரங்கள் மற்றும் எண்ணெய் நிலையங்களுக்கு எதிரான எல்லை தாண்டிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஹவுதிகள் சமீபத்தில் அதிக அளவில் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த வெள்ளியன்று, சவூதி தலைமையிலான கூட்டணி, குண்டுகள் நிறைந்த ட்ரோன் மற்றும் ஹவுதி இராணுவத்தால் எல்லை நகரங்களான காமிஸ் முஷைத் மற்றும் ஜசான் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையை தடுத்து நிறுத்தியதாகக் கூறியது.

இரு நகரங்களும் தென்மேற்கு சவூதி அரேபியாவில் உள்ள மாவட்டங்களில் ஒன்றாகும், அவை ஹவுதிகளால் அடிக்கடி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன.

ஈரான் ஆதரவு ஹவுதிகள் பல வடக்கு ஏமன் மாகாணங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஜனாதிபதி அப்து-ரபு மன்சூர் ஹாடியின் தலைநகர் சனாவிலிருந்து வெளியேற்றிய, 2014’ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து ஏமன் உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ளது.

ஹாடி அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக சவூதி தலைமையிலான அரபு கூட்டணி 2015 மார்ச் மாதம் ஏமன் மோதலில் தலையிட்டு ஹவுதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகிறது.

Views: - 54

0

0