317 சிறுமிகளை துப்பாக்கி முனையில் கடத்திய தீவிரவாதிகள்..! நைஜீரியாவில் தொடரும் அட்டூழியம்..!

27 February 2021, 9:21 pm
nigeria_kidnapping_updatenews360
Quick Share

வடக்கு நைஜீரியாவில் ஒரு உறைவிடப் பள்ளியில் இருந்து துப்பாக்கி ஏந்தியவர்கள் 317 சிறுமிகளை கடத்திச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜங்கேபே நகரில் உள்ள அரசு பெண்கள் ஜூனியர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் சிறுமிகளை மீட்பதற்காக காவல்துறையும் இராணுவமும் கூட்டு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக ஜம்பாரா மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் முகமது ஷெஹு தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட இரு சிறுமிகளின் தந்தையான நசிரு அப்துல்லாஹி, தனது மகள்கள், 10 மற்றும் 13 வயதுடையவர்கள் காணாமல் போனவர்களில் ஒருவர் என்று கூறினார்.

“பள்ளிக்கு அருகில் இராணுவம் ஒரு வலுவான இருப்பைக் கொண்டிருந்தாலும் அவர்களால் சிறுமிகளைப் பாதுகாக்க முடியவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.” என்று அவர் கூறினார். 

“இந்த கட்டத்தில், நாங்கள் கடவுளை மட்டுமே நம்புகிறோம்.” என அவர் மேலும் கூறினார்.

துப்பாக்கி ஏந்தியவர்கள் அருகிலுள்ள இராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடியையும் தாக்கினர். இந்த தாக்குதலில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

ஆயுதமேந்திய பல பெரிய குழுக்கள் ஜம்பாரா மாநிலத்தில் செயல்படுகின்றன. அவை அரசாங்கத்தால் கொள்ளைக்காரர்கள் என்று வர்ணிக்கப்படுகின்றன. மேலும் பணத்திற்காக கடத்தப்படுவதற்கும், தங்கள் உறுப்பினர்களை சிறையில் இருந்து விடுவிப்பதற்கும் அழுத்தம் கொடுக்கப்படுகின்றன.

நைஜீரிய ஜனாதிபதி முகமது புஹாரி நேற்று கூறுகையில், அனைத்து பள்ளி பணயக்கைதிகளும் பாதுகாப்பாகவும், உயிருடன், பாதிப்பில்லாமலும் திரும்பப் பெறுவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்று தெரிவித்துள்ளார்.

நைஜீரியா பல ஆண்டுகளாக இதுபோன்ற பல தாக்குதல்களையும் கடத்தல்களையும் கண்டு வருகிறது. குறிப்பாக ஏப்ரல் 2014’இல் போர்னோ மாநிலத்தில் சிபோக்கில் உள்ள மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 276 சிறுமிகளை ஜிகாதி குழு போகோ ஹராம் நடத்திய பெரிய கடத்தலாகும். அந்த கடத்தலில் இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நைஜர் மாநிலத்தில் உள்ள ககர அரசு அரசு அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 27 மாணவர்கள் உட்பட 42 பேரை துப்பாக்கிதாரிகள் கடத்திச் சென்ற இரண்டு வாரங்களுக்குள் இந்த தாக்குதல் நடந்தது. இரு வாரங்களுக்கு முன்பு நடந்த கடத்தலில் சிக்கிய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இன்னும் விடுவிக்கபபடவில்லை.

முன்னதாக, டிசம்பர் மாதம், கட்சினா மாநிலத்தில் உள்ள கங்காரா அரசு அறிவியல் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 344 மாணவர்கள் கடத்தப்பட்டனர். இறுதியில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

நைஜீரியாவில் கடத்தல் தொடர்கதையாக உள்ள நிலையில், பாதுகாப்பிற்காக ஆசிரியர்கள் மற்ற மாநிலங்களுக்கு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் பல குழந்தைகள் சமூகங்களில் அடிக்கடி வன்முறைத் தாக்குதல்களுக்கு மத்தியில் கல்வியைக் கைவிட வேண்டியிருக்கிறது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 5

0

0