கொரோனாவால் பாதித்தவர்களுக்கு இலவச பிஸ்சாக்களை வழங்கும் இருபது வயது முதலாளி…!

24 March 2020, 6:21 pm
Quick Share

உலகத்தின் அழிவின் ஆரம்பமென்று சித்தரிக்கப்படும் இந்த கொரோனா வைரஸால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை பல்மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது வேகமெடுத்து பரவும் இந்த வைரஸால் இதுவரை 434 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெவ்வேறு மாநிலங்களில் ஒன்பதுப்பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர்.


இந்த கொரோனாவை வருவதையறியாத ஒரு இருபது வயதானவரான மிலன் வார்கா தனது சொந்த நாடான ஹங்கேரியிலுள்ள புடாபெஸ்ட் என்னும் பகுதியில் அடுத்த மூன்று ஆண்டிற்கான பிஸ்சா செய்யவேண்டிய பொருட்களை வாங்கிவைத்துள்ளார். ஆனால் இந்த கொரோனாவால் அந்த பகுதியே தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.


அதனால் தான் வாங்கியபொருள்களை வீணாக்க விரும்பாமல் அதனை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனாமாக கொடுத்துவருகிறார்.”இது தேவையானவர்களுக்கு பொய் சேரட்டும்” என்ற நோக்கத்தில் இவர் இதனை செய்வதாக கூறிவருகிறார்.