லேசர் ஒளியில் ஜொலித்த மகாத்மா உருவம்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மிளிர்ந்த புர்ஜ் கலீபா..!!

Author: Aarthi Sivakumar
3 October 2021, 5:30 pm
Quick Share

துபாய்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா கட்டடத்தில் மஹாத்மா காந்தியின் புகைப்படம் ஒளிவிளக்குகளால் மிளிர்ந்தது காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

காந்தி ஜெயந்தியான நேற்று இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சர்வதேச அளவில், காந்தி ஜெயந்தி வன்முறையற்ற சர்வதேச நாளாக அனுசரிக்கப்படுகிறது.

டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பல்வேறு தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு இடங்களில் கதர் ஆடை உடுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதேபோல், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபாவில் நேற்று மஹாத்மா காந்தியின் புகைப்படம் மின்விளக்குகளால் ஒளிர்ந்தது. இது காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விதமாக இருந்தது.

Views: - 561

0

0