இங்கிலாந்தில் ஒரே நாளில் கொரோனாவால் உயர்ந்த மரணம்: மூன்றடுக்கு ஊரடங்கு அமல்…!!

Author: Aarthi
14 October 2020, 5:03 pm
boris john - updatenews360
Quick Share

இங்கிலாந்தில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிகிச்சை பலனின்றி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லண்டன்: இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு, கொரோனா பரவலை எதிர்கொள்ள மூன்றடுக்கு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,234 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4 மாதங்களில் முதன்முறையாக ஒரே நாளில் 143 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனா உறுதி செய்யப்பட்ட 28 நாட்களில் 111 பேர் மரணமடைந்த சம்பவமும் இங்கிலாந்தில் நடந்துள்ளது. இதனி டையே, கொரோனா பாதித்து இறந்தவர்கள் என தனியாக ஒரு 58,500 பேர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. இவர்களின் இறப்பு சான்றில், கொரோனாவால் இறந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்றடுக்கு ஊரடங்கு முறையால் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இதனிடையே, ஊரடங்கால் கொரோனா பரவல் கட்டுக்குள் வராது என முரணான அறிக்கை ஒன்றை உலக சுகாதார அமைப்பின் முக்கிய நிர்வாகி ஒருவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 28

0

0