தூண்டிலில் சிக்கிய மீனை வாயில் கவ்வியபடி வந்த முதலை! வைரல் வீடியோ

7 March 2021, 4:57 pm
Quick Share

ஆஸ்திரேலியாவில் மீனுக்கு வீசப்பட்ட தூண்டிலில் சிறிய சுறா மீன் ஒன்று சிக்கி கொள்ள, அதனை தனது வாயில் கவ்வியபடி முதலை ஒன்று வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜெஃப் ட்ருட்வின் மற்றும் நாட் பார்ன்ஸ் இருவரும் விந்தாம் கடற்கரையில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வீசிய தூண்டிலில், ஒரு சிறிய பிளாக் டிப் சுறா சிக்கி கொண்டது. ஆஹா இன்று நல்ல வேட்டை என தூண்டிலில் அவர்கள் இழுத்த போது, மீனை எங்கிருந்தோ வந்த 8 அடி நீள முதலை ஒன்று வாயில் கவ்வி கொண்டது. தூண்டிலை அவர்கள் இழுக்க இழுக்க அந்த முதலை அவர்கள் படகு அருகில் வந்துவிட்டது.

வேறு வழியில்லை என அவர்கள் தூண்டிலை விடுவிக்க, சுறாவை கவ்வியபடி, முதலை தண்ணீருக்குள் நீந்தி சென்றது. இதனை ஜெஃப் வீடியோவாக எடுத்து வெளியிட அது வைரலாக பரவி வருகிறது. வீடியோவில், வாயில் கவ்விய சுறாவை முதலை விட மறுப்பது பதிவாகி உள்ளது.

இதுகுறித்து ஜெஃப் கூறுகையில், ‘‘நானும் நாட்டும் சில மணி நேரம் மீன் பிடிக்க சென்றிருந்தோம். நாட் வீசிய தூண்டிலில் குட்டி சுறா ஒன்று சிக்கி கொண்டது. அதனை இழுக்கும் போது, முதலை வந்து அதனை கவ்வி கொண்டது. அதன் சக்தி வாய்ந்த தாடைகளில் இருந்து சுறாவை மீட்க முடியாததால், தூண்டிலை விடுவித்து விட்டோம். 30 ஆண்டுகளாக மீன் பிடிக்கிறேன். இதபோன்றதொரு சம்பவம் எனக்கு இதுவரை நடந்ததில்லை. முதலையை அருகில் பார்த்த போது மிகவும் அதிர்ந்து போனேன்’’ என்றார்.

Views: - 1

0

0