கேன்சர் மருத்துவமனை மற்றும் கிரிக்கெட் ஸ்டேடியம்..! மாலத்தீவில் புதிய திட்டங்களைத் தொடங்கும் இந்தியா..!

Author: Sekar
2 October 2020, 7:52 pm
India_PM_Modi_Maldives_President_Ibrahim_Mohamed_Solih_Updatenews360
Quick Share

வெளிநாட்டு வர்த்தகத்தை எளிதாக்குவதற்காக இந்திய அரசுக்கு சொந்தமான எக்சிம் வங்கி, மார்ச் 2019’இல் மாலத்தீவுக்கு 800 மில்லியன் டாலர்களை வளர்ச்சித் திட்டங்களுக்காக உறுதியளித்திருந்தது. கடந்த செப்டம்பரில், நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இதில் மேலும் 250 மில்லியன் டாலர் கடனை கொரோனா காரணமாக வழங்குவதாக அறிவித்தது.

2019’ஆம் ஆண்டில் மாலத்தீவிற்கு உறுதியளித்த நிதிக்கு இணங்க இந்தியா 22,000 இருக்கைகள் கொண்ட கிரிக்கெட் ஸ்டேடியம் மற்றும் 100 படுக்கைகள் கொண்ட கேன்சர் மருத்துவமனையை ஹுல்ஹுமாலேவில் கட்ட உள்ளது.

இந்த திட்டங்களைப் பற்றி விவாதிக்க, மாலத்தீவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் சுதிர், மாலத்தீவு வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் முகமது ஜெய்ஷ் இப்ராஹிமை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்து விவாதித்துள்ளார். 

இது குறித்து மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் இன்று மக்களுக்கு விளக்கமளித்துள்ளது. “மாலத்தீவுக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட 800 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் மூலம் 100 படுக்கைகள் கொண்ட அதிநவீன கேன்சர் மருத்துவமனை ஹுல்ஹுமாலில் அமைக்கப்படும். இந்த திட்டம் சுகாதாரத் துறையில் ஏற்கனவே உள்ள நெருக்கமான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுவாக்கும். மேலும் மனிதவளத் துறையின் வலுவான தொடர்புகளையும் உள்ளடக்கும்.” என்று இந்திய தூதரகம் ட்வீட் செய்துள்ளது.

இந்தியத் தூதரகம் மேலும், “ஹவுசிங் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட். சென்ட்ரல் பார்க் மற்றும் ஹுல்ஹுமாலில் அரைவல் ஜெட்டியை புதுப்பித்தல் ஆகியவை எங்கள் இதயத்திற்கு நெருக்கமான மானிய திட்டங்கள் ஆகும். ஓய்வு மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கைகளுக்கு இந்த பூங்கா சரியான இடமாக இருந்தாலும், ஜெட்டி பார்வையாளர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் ஒரே மாதிரியாக பயனளிக்கும்.” எனத்  தெரிவித்துள்ளது.

Views: - 37

0

0