அமெரிக்க பாதுகாப்புச் செயலரின் முதன்மை அதிகாரியாக நியமிக்கப்பட்ட இந்தியர்..!

11 November 2020, 2:22 pm
kash_patel__updatenews360
Quick Share

இந்திய வம்சாவளி அமெரிக்கரான காஷ் படேல், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கிறிஸ் மில்லருக்கு தலைமை பணியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பெண்டகன் அறிவித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை நீக்கிவிட்டு, தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் கிறிஸ் மில்லரை பாதுகாப்பு செயலாளராக நியமித்த ஒரு நாள் கழித்து பெண்டகனில் இருந்து புதிய நியமனம் வந்துள்ளது.

கிறிஸ் மில்லர் கடந்த திங்களன்று புதிய பதவியை ஏற்றுக்கொண்டார் என்று பெண்டகன் தெரிவித்துள்ளது.

தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஊழியர்களில் ஒருவராக இருக்கும் காஷ் படேல், செயல் செயலாளர் கிறிஸ் மில்லரின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக பெண்டகன் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. முன்னதாக இந்த பதவியிலிருந்த முந்தைய நாள் ராஜினாமா செய்த ஜென் ஸ்டீவர்ட்டை அடுத்து இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

காஷ் படேல் என்று பிரபலமாக அறியப்படும் காஷ்யப் பிரமோத் படேல் முன்பு ஹவுஸ் நிரந்தர தேர்வுக் குழுவில் பயங்கரவாத எதிர்ப்புத் துறையின் மூத்த ஆலோசகராக பணியாற்றினார்.

ஜூன் 2019’இல், 39 வயதான படேல் வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு இயக்குநரகத்தின் மூத்த இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

Views: - 22

0

0