ஜில் பிடெனின் கொள்கை இயக்குநராக இந்திய வம்சாவளி நியமனம்..! ஜோ பிடென் அறிவிப்பு..!

21 November 2020, 1:13 pm
mala_adiga_updatenews360
Quick Share

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடென் இன்று இந்திய அமெரிக்கரான மாலா அடிகாவை தனது மனைவி ஜில் பிடனின் கொள்கை இயக்குநராக நியமித்தார்.

அடிகா ஜில் மூத்த ஆலோசகராகவும், ஜோ பிடன்-கமலா ஹாரிஸ் தேர்தல் பிரச்சாரத்தின் மூத்த கொள்கை ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். முன்னதாக, அடிகா ஜோ பிடன் அறக்கட்டளையில் உயர் கல்வி மற்றும் இராணுவ குடும்பங்களுக்கான இயக்குநராக இருந்தார்.

முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் நிர்வாகத்தின் போது, ​​கல்வி மற்றும் கலாச்சார விவகார பணியகத்தில் கல்வித் திட்டங்களுக்கான துணை உதவி செயலாளராக அடிகா பணியாற்றியுள்ளார். உலகளாவிய மகளிர் பிரச்சினைகள் தொடர்பான அலுவலகத்தின் செயலாளராகவும், தூதரின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றினார்.

இல்லினாய்ஸைப் பூர்வீகமாகக் கொண்ட அடிகா கிரின்னல் கல்லூரி, மினசோட்டா பொது சுகாதாரப் பள்ளி மற்றும் சிகாகோ பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றவர்.

அடிப்படையில் ஒரு வழக்கறிஞரான அடிகா, 2008’இல் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் பிரச்சாரத்தில் சேருவதற்கு முன்பு சிகாகோ சட்ட நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஒபாமா நிர்வாகத்தில் அசோசியேட் அட்டர்னி ஜெனரலுக்கான ஆலோசகராக அவர் பணியைத் தொடங்கினார்.

பின்னர் ஜனநாயகக் கட்சியுடன் நெருக்கமாக [பணியாற்றி வந்த அடிகா, தற்போது ஜோ பிடென் – கமலா ஹாரிஸ் வெற்றிக்கு பெருமளவில் பங்காளித்துள்ளதால், அதற்கான பிரதிபலனாக அதிபர் மாளிகையில், அமெரிக்காவின் முதல் பெண்மணியின் கொள்கை இயக்குநராக அடிகா நியமிக்கப்பட்டுள்ளார்.

Views: - 25

0

0