மனைவியை விவாகரத்து செய்த இந்திய மருத்துவர்….இளைஞரை மறுமணம் செய்த கொடுமை..!!

Author: Aarthi
10 October 2020, 1:49 pm
boy-boy marriage - updatenews360
Quick Share

வாஷிங்டன்: இளைஞருடன் ஏற்பட்ட காதல் காரணமாக மனைவியை விவாகரத்து செய்து, இளைஞரை கணவன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பொல்லரிமாடி கிராமத்தை சேர்ந்தவர் டாக்டர் சரத் பொன்னப்பா. இவருக்கு திருமணம் ஆகி மனைவியுடன் அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அங்கு அவருக்கு வடஇந்தியாவை சேர்ந்த தருண் சந்தீப் தேசாய் என்ற இளைஞரின் நட்பு கிடைத்துள்ளது.

ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இவர்களின் நட்பு நாளைடைவில் காதலாக மாறி ஒரு கட்டத்தில் இருவரும் ஓரினசேர்க்கையாளராக மாறினார்கள். இதன் பின்னர் சரத் பொன்னப்பா அந்த இளைஞரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

இதனையடுத்து, சரத் பொன்னப்பா, தருண் சந்தீப் தேசாயை திருமணம் செய்துகொண்டார். ஆண்- பெண் மணமக்களுக்கு எப்படி திருமணம் நடைபெறுமோ அதுபோல் இருவரும் புதிய ஆடைகள் அணிந்து திருமணம் செய்துள்ளனர். இருவரும் கொடவா சமுதாய மக்களின் பாரம்பரிய உடை அணிந்து, நீண்ட வாள், கத்தி, தலைப்பாகை உள்ளிட்டவை அணிந்து கொடவா சமுதாய பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

இதுகுறித்து, குடகு கொடவா சமுதாய நிர்வாகி ஒருவர், இந்த திருமணம் இயற்கைக்கு விரோதமானது. இவ்வாறு திருமணம் செய்துகொள்பவர்கள் நீண்ட நாட்கள் சேர்ந்து வாழ முடியாது. ஓரினச் சேர்க்கை திருமணங்கள் நமது கலாச்சாரத்திற்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.

Views: - 44

0

0