சவூதி அரேபியா சென்ற இந்திய போர்க்கப்பல்..! இருநாட்டு கடற்படையின் கூட்டு பயிற்சியில் பங்கேற்பு..!

5 April 2021, 4:28 pm
indian_navy_updatenews360
Quick Share

இந்திய போர்க்கப்பல் ஒன்று சவூதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில் சவூதி அரேபிய கடற்படையுடன் இந்திய போர்க்கப்பல் கூட்டு பயிற்சியில் பங்கேற்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சவூதி அரேபியாவின் ஜுபைல் துறைமுகத்திற்கு கடந்த சனிக்கிழமை போர் கப்பல் ஐ.என்.எஸ் தல்வார் சென்றதாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

“இந்த பயணமா இந்தியாவுக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான ஆழமான வேரூன்றிய நட்பு உறவுகளையும் பல தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று அவர் கூறினார்.

கப்பல் புறப்படும் போது ராயல் சவூதி கடற்படை படைகளுடன் ஒரு பயணப் பயிற்சியையும் மேற்கொள்ளும் என்று அந்த அதிகாரி கூறினார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை இரு நாடுகளும் வலுப்படுத்தி வரும் அதே வேளையில் இருநாட்டு கடற்படைகளும் கடல் ரீதியிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஆர்வமாக இருப்பதாக மற்றொரு அதிகாரி கூறினார்.

இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக விரிவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நாரவனே கடந்த டிசம்பரில் சவூதி அரேபியாவுக்கு பயணம் செய்தார். மூலோபாய ரீதியாக முக்கியமான வளைகுடா நாடான சவூதி அரேபியாவிற்கு 13 லட்சம் வலிமைமிக்க இந்திய இராணுவத்தின் தலைவர் ஒருவர் முதன்முதலில் அப்போது தான் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனரல் நாரவனே இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் சவூதி அரேபியாவின் மூத்த இராணுவ அதிகாரிகளுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

Views: - 0

0

0

Leave a Reply