ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட்: பேட்டிங்கில் இலங்கையை புரட்டியெடுத்த தீபக் சாஹர், புவனேஸ்வர்… தொடரை வென்று அசத்தல்!!

21 July 2021, 9:06 am
Quick Share

இலங்கை: கொழும்பு நகரில் நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் குவித்தது. 276 ரன்கள் சேர்த்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 5 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 7 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில 2-0 என்ற கணக்கில் வென்று ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இலங்கையில் நடந்த பகலிரவு ஒருநாள் போட்டியில் சேஸிங் செய்யப்பட்ட 3வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மேலும், இலங்கை அணிக்கு எதிராக கடந்த 2007ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 9வது முறையாக ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை அணிக்கு எதிராக 93 ஒருநாள் போட்டிகளில் வென்று ஓர் அணிக்கு எதிராக அதிகமான வெற்றிகளைக் குவித்த அணி என்ற வரலாற்றையும் இந்திய அணி பெற்றுள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் 8வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய தீபக் சஹரும், 9வது பேட்ஸ்மேனாக வந்த புவனேஷ்வர்குமாரும்தான். இரு பந்துவீச்சாளர்களும் சிறப்பான ஆட்டத்தினால் அணியை வெற்றி பெறச் செய்தனர்.

தீபக் சஹர் 82 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அவருக்குத் துணையாக ஆடிய புவனேஷ்வர் குமார் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். உலகக் கோப்பையில் ரவிந்திர ஜடேஜா 77 ரன்கள் சேர்த்ததே இந்திய அணியில் 8வது வீரராக களமிறங்கி ஒரு வீரர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது, அதற்கு அடுத்தார்போல் சஹர் 69 ரன்கள் சேர்த்துள்ளார் புவனேஷ், சஹர் இருவரும் சேர்ந்து 8வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தப் போட்டிக்குமுன் தீபக் சஹரின் அதிகபட்ச ஸ்கோர் என்பது 12 ரன்கள்தான். ஆனால், அணியின் சூழல், வெற்றி தேவை என்ற நெருக்கடி ஆகியவற்றால் தீபக் சஹர் பேட்டிங்கில் ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தி முதலாவது அரைசதத்தையும் பதிவு செய்துள்ளார். தீபர் சஹரின் பொறுமையான ஆட்டம், ஷாட்கள், ஸ்லோ பந்துகளை சமாளித்தது என இலங்கை வீரர்களின் பந்துவீச்சை லாவகமாகச் சமாளித்து ஆடினார்.

ind vs sl 2nd odi: Ind vs Sl: 'வரலாற்று சாதனை' இந்தியா இரண்டாவது போட்டியில்  வென்றால்…செம்ம ரெக்கார்ட்! - if india won in 2nd odi against srilanka it  will be huge record in odi cricket |

பிரித்வி ஷா, தவண், குர்னல் பாண்டியா ஆகிய 3 பேரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி நெருக்கடி கொடுத்த ஹசரங்காவின் பந்துவீச்சையும் சஹரும், புவனேஷ்வர் குமாரும் சமாளித்து ஆடியது பாராட்டுக்குரியது. 276 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. பிரித்வி ஷா அதிரடியாக 3 பவுண்டரிகள் அடித்து 13 ரன்களில் ஹசரங்கா பந்துவீச்சில் வெளியேறினார்.

மணிஷ் பாண்டே, தவண் இருவரும் 3வது விக்கெட்டுக்கு ஓரளவு தாக்குப்பிடித்தனர். தவண் 29 ரன்னில் ஹசரங்கா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். 4வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ், பாண்டே இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். பாண்டே 37 ரன்னில் ரன்அவுட் ஆகி, மீண்டும் ஏமாற்றம் அளித்தார். மிகவும் மெதுவாக ரன்களை சேர்த்த பாண்டேயின் ஆட்டம் மனநிறைவைத் தரவில்லை. 4வது விக்கெட்டுக்கு இருவரும் 50 ரன்கள் சேர்த்தனர்.

India vs srilanka: Ishan Kishan sets new record in international cricket

அடுத்துவந்த ஹர்திக் பாண்டியா டக்அவுட்டில் சனகா பந்துவீச்சில் வெளியேறி ஏமாற்றத்தை அளித்தார். 6வது விக்கெட்டுக்கு குர்னல் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் நிதானமாக ஆடினர். யாதவ் 42 பந்துகளில் அரைசதம் அடித்தார். சூர்யகுமார் 53 ரன்கள் சேர்த்த நிலையில் சண்டகன் பந்தவீச்சில் கால்காப்பில் வாங்கி விக்கெட்டை இழந்தார். குர்னல் பாண்டியா 35 ரன்னில் ஹசரங்கா பந்துவீச்சில் போல்டாகினார்.

193 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. 8வது விக்கெட்டுக்கு தீபக் சஹர், புவனேஷ்வர் குமார் ஜோடி சேர்ந்தனர். சஹர் 69 ரன்னிலும், புவனேஷ்வர் 19 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 49.1 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 277ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் ஹசரங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இந்திய அணி 3 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி

முன்னதாக இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலாவது ஒருநாள் ஆட்டத்தைவிட இந்த ஆட்டத்தில் இலங்கை வீரர்களின் பேட்டிங் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தது. பனுகா, பெர்னான்டோ நல்ல தொடக்கம் அளித்தனர். பனுகா 36 ரன்னில் சஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த ராஜபக்ச டக்அவுட்டில் சஹல் பந்தவீச்சில் வெளியேறினார். டி சில்வா 32 ரன்னிலும், அசலங்கா 65 ரன்களும சேர்த்தனர்.

2nd ODI, #SLvIND: Sri Lanka finishes at 275/9 in their 50 overs against  India at R Premadasa Stadium in Colombo || இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள்  போட்டி: இந்திய அணிக்கு 276 ரன்கள் வெற்றி ...

கருணா ரத்னே 44 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். நடுவரிசை பேட்ஸ்மேன்கள் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் சேர்த்தது இலங்கை அணி. இந்தியத் தரப்பில் புவனேஷ்வர் குமார், சஹல் தலா 3 விக்கெட்டுகளையும், சஹர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Views: - 199

0

0